நிரந்தர உறுப்பினர் கோரிக்கை.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கோரும் இந்தியா

அதிகாரக் கட்டமைப்பில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
நிரந்தர உறுப்பினர் கோரிக்கை.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கோரும் இந்தியா
Published on

ஐநா பாதுகாப்பு கவுனிசிலில் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷியா ஆகிய 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐநா பாதுகாப்புச் கவுனிசிலின் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. பல்வேறு நாடுகளும் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வலியுறுத்தி வருகின்றன.

நிரந்தர உறுப்பினர்

இந்நிலையில் ஐநா கூட்டத்தில் பேசிய, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பி.ஹரிஷ்,

"நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல், வெறும் தற்காலிக உறுப்பினர்களை மட்டும் அதிகரிப்பது பாதுகாப்புச் சபையின் தற்போதைய அதிகாரக் கட்டமைப்பில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

உலக நாடுகள் உண்மையான சீர்திருத்தத்தை எதிர்பார்க்கின்றன.

எனவே, வெறும் தற்காலிக உறுப்பினர்களை சேர்ப்பதோடு சபையின் விரிவாக்கத்தை நிறுத்திக்கொண்டால் அந்தச் சீர்திருத்த முயற்சி தோல்யாகவே முடியும்" என்று சாடியுள்ளார்.

Cofee club

பாதுகாப்புச் சபையில் புதிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதை தடுக்க யுனைட்டிங் பார் கான்சென்சஸ் என்ற 12 நாடுகள் கொண்ட குழு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இக்குழுவிற்கு இத்தாலி தலைமை தாங்குவதோடு, இதில் பாகிஸ்தானும் ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது. இந்த குழுவை காபி கிளப் என அழைப்பதுண்டு.

நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான அடிப்படை வரைவு உரையை உருவாக்க விடாமல் இக்குழுவினர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தந்திரம்

இக்குழுவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்த பி.ஹரிஷ், "எல்லாவற்றிலும் உடன்பாடு ஏற்படும் வரை எதிலும் உடன்பாடில்லை என்ற இவர்களின் அணுகுமுறை, சீர்திருத்தத்தைத் தடுத்து தற்போதைய நிலையே நீடிக்க செய்வதற்கான ஒரு தந்திரம் ஆகும்.

ஐநாவின் மற்ற நடைமுறைகளைப் போல இதற்கும் ஒரு முறையான வரைவு உரையை தயாரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com