ரஷியா மீது டிரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியா மீது டிரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்திய உக்ரைன்
Published on: 

உக்ரைனின் கீவ் நகரில் கடந்த வியாழக்கிழமை டிரோன் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மனித நேயமற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் சூளுரைத்திருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 14 பிராந்தியங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் சம்பவம் நடத்தியது.

அதிகாலை 3 மணிக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரழந்துள்ளதாக மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரே வொரோபியோவ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்றிரவு நடந்த தாக்குதலில் 556 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com