பதவி விலகும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்?.. நாளை அறிவிக்க வாய்ப்பு

மொத்த எம்பிகளில் கால் பகுதியினர் ஸ்டார்மர் பதவியிலிருந்து விலக வேண்டும் வலியுறுத்தி வந்தனர்.
பதவி விலகும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்?.. நாளை அறிவிக்க வாய்ப்பு
Published on

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாளை (ஜூன் 22) தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் பிரிட்டனின் The Observer என்ற பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி

2024 பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் ஆனார்.

ஆனால் அவர் அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் காரணமாக மக்கள் ஆதரவு அவருக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொழிலாளர் கட்சியின் மொத்த எம்பிகளில் கால் பகுதியினர் ஸ்டார்மர் பதவியிலிருந்து விலக வேண்டும் வலியுறுத்தி வந்தனர்.

முடிவு

இந்நிலையில் விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகு, தான் பிரதமர் பதவியில் நீடிப்பது இனி உகந்ததல்ல என்ற முடிவுக்கு ஸ்டார்மர் வந்துள்ளதாக The Observer தெரிவித்துள்ளது.

எனவே நாளை (திங்கள்கிழமை) அதிகாலைக்குள் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஸ்டார்மர் தனது ராஜினாமா முடிவை அறிவிக்கலாம் என Observer தெரிவித்துள்ளது

அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "பிரதமர் ஸ்டார்மர் இன்னும் தனது அரசாங்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்; அவர் பதவியிலிருந்து விலகும் எண்ணத்தில் இல்லை" எனத் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com