இந்தியர்கள் குடியேறிகளாக இங்கிலாந்தில் இருப்பதை வெறுக்கிறேன் - பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்

இங்கிலாந்தின் பல பகுதிகளில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் குடியேறி உள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபார்ட் லோவ் தெரிவித்துள்ளார்.
I hate Indians and muslims living in england as employed - british mp tweets
Published on

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினரான ரூபார்ட் லோவ், இந்தியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் சர்ச்சையான வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடியேறிகள், பிரிட்டிஷ் குடிமக்களின் வேலைகளை பறித்து, நாட்டின் கலாச்சார அடையாளத்தை மாற்றி வருவதாக பதிவிட்டுள்ளார்.

ரிஃப்பார்ம் யுகே என்ற அமைப்பிலிருந்து பிரிந்து, சமீபத்தில் ரீஸ்டோர் பிரிட்டன் என்ற வலதுசாரி அரசியல் இயக்கத்தையும் கட்சியையும் லோவ் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து லோவ் தனது எக்ஸ் பக்கத்தில், “வேலையில்லாமல் இருக்கும் பிரிட்டானிய இளைஞர்களின் வேலைகளைச் செய்வதற்காக, லட்சக்கணக்கான இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் இறக்குமதி செய்யவேண்டும் என்று நான் நம்பவில்லை.

எனது கருத்துக்களுக்காக இனவாதி என்று முத்திரை குத்தப்படுவது குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியர்கள் குடியேற்றத்தின் காரணமாக வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகள், ஒரு வெளிநாடு போல் மாற்றப்பட்டுள்ளது.

வடமேற்குப் பகுதியின் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றால், அது உண்மையிலேயே ஒரு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டது போல இருக்கும். இது தற்செயலாக நடக்கவில்லை.

இது பழமைவாத அரசியல்வாதிகளால் மூன்றாம் தர உலக நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான குறைந்த திறன் கொண்ட புலம்பெயர்ந்தோர் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இது திட்டமிட்ட எடுக்கப்பட்ட ஒரு முடிவு.

புர்கா அணிந்த இரண்டு, மூன்று, நான்கு பெண்களுடன் ஆண்கள் சுற்றித் திரிகின்றனர். இது இயல்பானது அல்ல. நான் அதை வெறுக்கிறேன். மான்செஸ்டரின் வெவ்வேறு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகள் இஸ்லாமியமாகி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com