UFC FREEDOM 250 | ஸ்பெயின் வீரரை நாக் அவுட் முறையில் வீழ்த்திய அமெரிக்க வீரர் கெய்த்ஜே

என் மனவுறுதியும், விடாமுயற்சியும் என்னை இடர்களிலிருந்து மீட்டுவிடும் என்று அமெரிக்க மல்யுத்த வீரர் கெய்த்ஜே கூறினார்.
UFC Freedom 250
Published on

அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் UFC FREEDOM 250 குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இந்த பிரமாண்டமான நிகழ்வு, அமெரிக்க சுதந்தரத்தின் 250வது ஆண்டு நிறைவையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 80வது பிறந்தநாளையும் கொண்டாடும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது.

இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான ஜஸ்டின் கெய்த்ஜே, ஸ்பெயினை சேர்ந்த 29 வயதான இலியா டொபுரியா என்ற வீரரை எதிர்கொண்டார்.

கெய்த்ஜே ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தனது கடுமையான குத்துகள் மற்றும் அப்பர் கட்-களால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றிலேயே டொபுரியாவின் முகத்தில் இரத்தம் வழிய, அவ்வப்போது டேக் டவுன் செய்வது போன்ற பாவனைகளைச் செய்து எதிராளியைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்.

இருப்பினும், டொபுரியா இரண்டாம் சுற்றில் மீண்டெழுந்து, தொடர்ச்சியான குத்துக்களால் கெய்த்ஜேயைக் கீழே தள்ளினார். இதையடுத்து ரவுண்ட் நான்கின் இறுதி சுற்றில் கேத்ஜே 38-37 என்ற புள்ளியில் டொபுரியாவை வீழ்த்தினார்.

இதன்மூலம் ஏற்கனவே இரண்டு முறை லைட்வெயிட் சாம்பியனாக இருந்த கெய்த்ஜே, நீண்ட காலமாகத் தனக்குக் கிடைக்காமல் இருந்த undisputed light weight பட்டத்தை இறுதியாகக் கைப்பற்றினார்.

போட்டிக்கு பின்பு பேசிய கெய்த்ஜே, “என் மனவுறுதியும், விடாமுயற்சியும் என்னை இடர்களிலிருந்து மீட்டுவிடும்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com