ஜப்பானில் ராணுவ மையத்தில் துப்பாக்கி சூடு- ஒரு வீரர் பலி

தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை.
ஜப்பானில் ராணுவ மையத்தில் துப்பாக்கி சூடு- ஒரு வீரர் பலி
Published on

மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்திய வீரரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com