நேட்டோ மாநாட்டின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கும் டிரம்ப்

அன்னா கெல்லி செய்தியாளர்களுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார்.
நேட்டோ மாநாட்டின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கும் டிரம்ப்
Published on

துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் மற்றும் சிரிய நாட்டு அதிபர்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

"புதன்கிழமை பிற்பகலில், அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் சிரிய அரபு குடியரசின் அதிபர் அல்-ஷாரா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்பார்," என்று துணைப் பத்திரிகை செயலாளர் அன்னா கெல்லி செய்தியாளர்களுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார்.

சந்திப்பு:

சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தொடங்கிய, உக்ரைன் மீதான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் அதிகரித்து வரும் வேளையில், அங்காராவில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது.

"போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பது குறித்து பேசுவதற்காகவே அதிபர் அவரை சந்திக்கிறார் என்பது தெளிவாகிறது. அது நீண்ட காலமாகவே அவருடைய முன்னுரிமையாக இருந்து வருகிறது," என்று ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறினார்.

தீவிர அழுத்தம்:

அதன்பிறகு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இதுகுறித்து பேசுவார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க சுதந்திரத்தின் 250-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விளாடிமிர் புதின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினர்.

டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியும் கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது சந்தித்தனர். அப்போது, ​​உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com