டிரம்ப் வருகைக்கு முன் வாஷிங்டன் ஹோட்டல் சுவரில் ஒளிபரப்பான எப்ஸ்டீன் வீடியோவால் பரபரப்பு

நேற்று மாலை முதல் வாஷிங்டன் நகரின் முக்கியப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு டிரம்ப் எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
டிரம்ப் வருகைக்கு முன் வாஷிங்டன் ஹோட்டல் சுவரில் ஒளிபரப்பான எப்ஸ்டீன் வீடியோவால் பரபரப்பு
Published on

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பிரபலமான ஹில்டன் ஹோட்டல் அமைந்துள்ளது.

'வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து' இந்த ஹோட்டலில் இன்று நடைபெற உள்ளது.

அதிபர் என்ற முறையில் டிரம்ப் இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் ஹில்டன் ஹோட்டலின் சுவர்களில், டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்பஸ்டீன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் ஆவணங்கள் திரையிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகளைக் காணவும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் நூற்றுக்கணக்கானோர் ஹோட்டல் முன்பாகக் திரண்டனர்.

ஹோட்டல் சுவர்களில் இந்த காட்சிகள் எப்படி திரையிடப்பட்டது என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது.

மேலும் நேற்று மாலை முதல் வாஷிங்டன் நகரின் முக்கியப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு டிரம்ப் எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணம் படைத்தோர் மற்றும் பிரபலங்களுக்கு போகப் பொருளாக வழங்கி வந்த எப்ஸ்டீன் கடந்த 2019 இல் கைதான சில மாதங்களில் நியூ யார்க் சிறையில் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் முந்தைய காலங்களில் டிரம்ப் நெருக்கம் காட்டியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி எப்ஸ்டீன் சேமித்து வைத்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன. அதில் டிரம்ப் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணங்கள் பதியளவே வெளியாகி உள்ளதாகவும், மீதி பாதி வெளியானால் அதில் உள்ள தகவல்கள் டிரம்ப் உள்ளிட்ட பலருக்கு ஆபத்தமாக மாறும் என்பதால் அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com