

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 'ஸ்டேட் ஹவுஸ் டிஸ்ட்ரிக்ட் 87' சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எமிலி கிரிகோரி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த மார்ச் 24, அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில், எமிலி கிரிகோரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் ஜான் மேப்பிள்ஸை சுமார் 2.4% வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிபர் டிரம்ப்பின் 'மார்-ஏ-லாகோ' இல்லம் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.
2024 அதிபர் தேர்தலின் போது இதே தொகுதியில் டிரம்ப், கமலா ஹாரிஸை விட 11% அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
இதனுடன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இத்தொகுதியின் பிரதிநிதியாக இருந்த மைக் கருசோ நீதிமன்ற அதிகாரியாகப் பொறுப்பேற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
எமிலி கிரிகோரி
அமெரிக்க ராணுவ அதிகாரியின் மனைவியும் மூன்று குழந்தைகளின் தாயுமான எமிலி கிரிகோரி (40 வயது) சிறுதொழில் முனைவோர் மற்றும் பொது சுகாதார நிபுணர் ஆவார்.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட இவர், சொத்து வரி உயர்வு, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்துத் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.