வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாள் பயணமாக சீனா சென்று, ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில் "சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவே உலகின் மிக முக்கியமான இருதரப்பு உறவு என்று நாங்கள் இருவரும் நம்புகிறோம். இந்த உறவு சிறப்பாகச் செயல்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஒருபோதும் அதை சீர்குலைத்துவிடக் கூடாது" என்றார்.

சீன அதிபரின் சந்திப்போன்போது, வெள்ளை மாளிகைக்கு செப்டம்பர் 24-ந்தேதி வருகை தருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் விடுத்துள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:-

அதிபர் ஷி அவர்களே, இந்த அழகான வரவேற்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இன்று இரவு, செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் எங்களைப் பார்வையிட வருமாறு உங்களுக்கும், திருமதி பெங் அவர்களுக்கும் அழைப்பு விடுப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

நாங்கள் அந்த வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இப்போது நான் எனது கோப்பையை உயர்த்திப் பிடித்து (உணவு அருந்தும்போது டிரிங்ஸ் கோப்பை), அமெரிக்க மற்றும் சீன மக்களிடையேயான செழுமையான மற்றும் நீடித்த உறவுகளுக்காக வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இது மிகவும் சிறப்பான ஒரு உறவு. மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான நேரமாக அமைந்தது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com