டிரம்புக்கு பரிசாக விமானத்தை வழங்கிய கத்தார்: ரூ. 4000 கோடி செலவில் நவீனமாக மாற்றிய அமெரிக்கா..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரத்யேகமாக தேர்ந்தெடுத்த சிவப்பு, வெள்ளை, அடர் நீலம் மற்றும் தங்க நிறத்திலான வண்ணக்கலவையில் விமானத்திற்கு வர்ணம் பூசப்பட்டது.
Trump gets interim Air Force One
Published on

கத்தார் நன்கொடையாக வழங்கிய போயிங் 747-8 சொகுசு விமானம்:

அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு கடந்த 2025 மே மாதம் போயிங் 747-8 ரக சொகுசு விமானத்தை கத்தார் நன்கொடையாக வழங்கியது. இந்த விமானம் அமெரிக்க ஜனாதிபதிக்கு வான்வழி போக்குவரத்தை வழங்க பயன்படுத்தப்பட உள்ளது.

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏர் ஃபோர்ஸ் ஒன்-இல் பயன்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலர் மதிப்பில், ரகசிய ராணுவத் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை எல்3 ஹாரிஸ் டெக்னாஜிஸ் நிறுவனம் மாற்றி அமைத்தது.

அமெரிக்கா பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த ராபின் முட்டை நீல நிறத்திற்கு பதிலாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரத்யேகமாக தேர்ந்தெடுத்த சிவப்பு, வெள்ளை, அடர் நீலம் மற்றும் தங்க நிறத்திலான வண்ணக்கலவையில் விமானத்திற்கு வர்ணம் பூசப்பட்டது.

இந்த நிலையில் போயிங் நிறுவனத்தின் இரண்டு VC-25B ரக ஜெட் விமானங்களை வழங்கும் வரை, இந்தப் புதிய ஜெட் விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி இடைக்கால அடிப்படையில் பயன்படுத்துவார் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ குழுவில் இணைப்பு:

மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் நடைபெற்ற விழாவில், டிரம்ப் இந்த புதிய சொகுசு விமானத்தை காட்சிப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ஆம் தேதி, இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, “இந்த விமானம், இதற்கு முன்பு யாரும் பார்த்திராத மிகவும் ஆடம்பரமான நிலையில், வெள்ளை மாளிகையில் உருமாற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com