இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது குற்றம் சுமத்திய டிரம்ப்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை முற்றிலும் ஏற்க முடியாது என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
trump
trumpடொனால்டு டிரம்ப்
Published on

ஓமன் கடற்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டன. இதில் கப்பலில் இருந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா கண்டனம்

இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

ஈரான்தான் தாக்குதல் நடத்தியது

இந்த நிலையில் இந்திய கப்பல்கள் மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

ஹார்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறி கொண்டிருந்த இந்திய கப்பல்கள் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் முழுமையாக முறியடிக்கப்பட்ட நிலையில், அத்தகைய தாக்குதல் முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

விவாதத்தில் இருந்த அம்சங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளது.

இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com