"இது ஒன்னும் இந்தியா கிடையாது.." சாலையில் 'குட்கா' துப்பிய இந்திய நபர்களை கண்டித்த நேபாள இளைஞர் - வீடியோ வைரல்

"இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்து இங்கே இப்படி செய்கிறீர்களா?" என்று கூறி அவர்களை அந்த இடத்தை சுத்தம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
"இது ஒன்னும் இந்தியா கிடையாது.." சாலையில் 'குட்கா' துப்பிய இந்திய நபர்களை  கண்டித்த நேபாள இளைஞர் - வீடியோ வைரல்
Published on

நேபாள மாநிலம் முக்திநாத் மற்றும் பொக்காராவுக்கு இடைப்பட்ட சாலையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர் காரில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் சிலர் குட்காவை மென்று சாலையில் துப்பியுள்ளனர்.

இதை கவனித்த உள்ளுர்வாசியான நேபாள இளைஞர் ஒருவர் அவர்களின் வாகனத்தை நிறுத்தி "இது இந்தியா அல்ல, சகோதரா... இது நேபாளம்... உடனடியாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவுங்கள்" என்று எச்சரித்தார்.

சுற்றுலாப் பயணிகள் சங்கடப்பட்டுப் பலமுறை மன்னிப்புக் கேட்டனர்.

இருப்பினும், அந்த நபர், "இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்து இங்கே இப்படி செய்கிறீர்களா?" என்று கூறி அவர்களை அந்த இடத்தை சுத்தம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

இந்தக் காணொளி இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் இதுபோன்ற அவப்பெயர் ஏற்படுகிறது என நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com