சிறை வாசத்திற்கு பின் குடும்பத்தாரை கட்டியணைத்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்

ஊழல் புரிந்த குற்றத்திற்காக கைதான நிலையில், தாய்லாந்து பிரதமரை விடுதலை செய்தது அந்நாட்டு நீதிமன்றம்
சிறை வாசத்திற்கு பின் குடும்பத்தாரை கட்டியணைத்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்
Published on

தாய்லாந்தில் ஊழல் புரிந்த குற்றத்திற்காக கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தாக்‌ஷின் ஷினவத்ரா விடுதலை செய்யப்பட்டார்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்த 76 வயதான ஷினவத்ரா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைதான நிலையில் திங்கட்கிழமை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாங்காக் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, “நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்ற எழுதப்பட்ட சிகப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.

இதை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது குடும்பத்தாரை கட்டியணைத்து கண்ணீர்விட்டார்.

இதையடுத்து சிறையின் முன்பு கூடியிருந்த மக்கள் “அவர் அரசியலை விட்டு வெளியேறுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்று கூறினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com