இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை மீண்டும் பிரதமராக்க திட்டம்? ஆளும் கட்சி மறுப்பு

மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே
Published on

கொழும்பு:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது.

இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.

அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறும்போது, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. அது போன்ற கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com