காசாவில் அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு: 40 பேர் பலி

சிலர் செல்போன் ஒளியில் மணலை தோண்டுவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி மணலில் புதைந்தவர்களை மீட்டனர்.மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காசாவில் அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு: 40 பேர் பலி
Published on

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனுஸ் நகர் அருகே அல்-மவாசி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 40 பேர் பலியானார்கள். 60 பேர் காயம் அடைந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டு அதில் இடிபாடுகள், மணல் மூடின. மீட்புப் பணியாளர்கள் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி மணலை மாற்றினர்.

சிலர் செல்போன் ஒளியில் மணலை தோண்டுவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி மணலில் புதைந்தவர்களை மீட்டனர்.

மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மனிதாபிமான பகுதியில் ஹமாஸ் அமைப்பி னர் பதுங்கி இருந்ததாகவும் அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com