பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடந்து வருகிறது.
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

மணிலா:

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹூகேவில் இன்று காலை நிலநடுக்கம் உண்டானது.

இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்றும் 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடந்து வருகிறது.

தற்போது பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்து சிதறி வருவதால் வடகிழக்கு அல்பே மாகாணத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com