செல்போனில் வீடியோ கால் மூலம் வெளியூரில் இருக்கும் காதலருக்கு முத்தம் கொடுக்கும் நவீன செயலி

சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
செல்போனில் வீடியோ கால் மூலம் வெளியூரில் இருக்கும் காதலருக்கு முத்தம் கொடுக்கும் நவீன செயலி
Published on

பீஜீங்:

சீனாவின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

அந்த வகையில் இப்போது சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியும்.

இதற்காக செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த ஆப் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் காதலி, அல்லது காதலனை தொடர்பு கொள்ள வேண்டும்.

அவரும் இணைப்பில் வந்ததும் இருவரும் நிஜத்தில் முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுத்து கொள்ளலாம்.

இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரம் இதற்கு இளம்ஜோடிகள் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com