தாக்குதலை நிறுத்த ஈரான் ராணுவத்துக்கு உச்ச தலைவர் மொஜ்தபா உத்தரவு - இது போரின் முடிவு கிடையாது என எச்சரிக்கை | Iran war

டிரம்ப், நேற்று இரவு ஈரானின் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமானார். இன்று(இரவு) ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தாக்குதலை நிறுத்த ஈரான் ராணுவத்துக்கு உச்ச தலைவர் மொஜ்தபா உத்தரவு - இது போரின் முடிவு கிடையாது என எச்சரிக்கை | Iran war
Published on

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

இதை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

மேலும் உலகின் 20 சதவீத எண்ணெய் ஏற்றுமதிக்கு அத்தியாவசியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழு கட்டுப்பாட்டில் எடுத்தது. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. உலகின் பல நாடுகள் எண்ணெய், எரிபொருள், எரிவாயு நெருக்கடிக்கு உள்ளாகின.

கடந்த ஒரு மாதமாக போர் தொடர்ந்து நடந்து வந்த சூழலில் ஈரானின் பதிலடிகளால் அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று இரவு ஈரானின் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமானார். இன்று(நேற்று) இரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அதிரடி திருப்பமாக பாகிஸ்தான் மத்யஸ்தத்தில் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளன. மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10 பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் இந்த காலகட்டதில் ஹார்முஸ் ஜலசந்தி வலியாக ஈரான் ராணுவ மேற்பார்வையுடன் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த சூழலில் மறைந்த அயதுல்லா காமேனியின் மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி, அனைத்து ராணுவப் பிரிவுகளும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இருப்பினும், இது போரின் முடிவைக் குறிக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே என்றும் தெஹ்ரான் தெளிவுபடுத்தியுள்ளது.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், தங்கள் கைகள் இன்னும் துப்பாக்கியின் விசையின் மீதே இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

"எதிரி மிகச்சிறிய தவறைச் செய்தாலும், நாங்கள் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்," என்று கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு கெஞ்சுவது ஈரானின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளது.

ஈரான் உச்சதலைவரின் அறிக்கைகள் ஊடகங்களில் வாசிக்கப்படுகிறவனே தவிர அவர் பொது வெளியில் தோன்றாதது அவரது நிலை குறித்த ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்து அவர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com