ஈரான் போர் எதிரொலி: ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடல்

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை.
ஈரான் போர் எதிரொலி: ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடல்
Published on: 

ஈரான் போர் இரண்டு மாதமாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் விமான எரிபொருள் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனைச் சமாளிக்க முடியாமல் பல விமான நிறுவனங்கள் தடுமாறின.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மே 2-ம் தேதியுடன் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்பிரிட் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிபர் டிரம்ப் 500 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்மொழிந்தார். ஆனால் அவருடைய ஆலோசகர்கள், குடியரசுக் கட்சியினர் ஆகியோரின் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.

ஈரான் போரால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட முதல் விமான நிறுவனமாகும். அமெரிக்காவின் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனங்களில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com