அல்ஜீரியா சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு: இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடல்

அல்ஜீரியா சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி வரவேற்றார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் ஜனாதிபதி முர்மு உரையாடினார்.
அல்ஜீரியா சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு: இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடல்
Published on

அல்ஜீர்ஸ்:

அல்ஜீரியா, மொரீசேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 13 முதல் 19 வரையிலான நாட்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 3 நாடுகளுக்கான அவருடைய சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி முர்மு, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரைச் சென்றடைந்தார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.

அல்ஜீரியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். அவருடன் இந்திய சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து, குழு புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து, இந்திய சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அன்புப் பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் முர்மு உரையாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com