பாகிஸ்தான் எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்.. 1 இந்தியர் உட்பட 17 மாலுமிகள் கதி என்ன?

கப்பலில் மொத்தம் 17 மாலுமிகளுடன் உள்ளனர். இதில் 10 பாகிஸ்தானியர்கள், 4 இந்தோனேசியர்கள், 1 இந்தியர், 1 இலங்கையர் மற்றும் 1 மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் உள்ளனர்.
பாகிஸ்தான் எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்.. 1 இந்தியர் உட்பட 17 மாலுமிகள் கதி என்ன?
Published on

இந்தியப் பெருங்கடல் சோமாலிய கடற்கரை அருகே 'ஹானர் 25' என்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு, சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 நாட்டிகல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கடத்தப்பட்ட கப்பல் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

சோமாலியா நாட்டில் இருந்து தனிபிரதேசமாக செயல்பட்டு வரும் சோமாலிலாந்தின் பெர்பெரா துறைமுகத்தில் இருந்து சோமாலியா தலைநகர் மெகாடிஷூ நோக்கி 18,500 பீப்பாய்கள் எண்ணெயுடன் கப்பல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது 6 ஆயுதம் ஏந்திய நபர்கள் கப்பலுக்குள் புகுந்து கப்பலை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளனர்.

இக்கப்பலில் மொத்தம் 17 மாலுமிகளுடன் உள்ளனர். இதில் 10 பாகிஸ்தானியர்கள், 4 இந்தோனேசியர்கள், 1 இந்தியர், 1 இலங்கையர் மற்றும் 1 மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com