ஜனநாயகம் தழைக்கும்போது ஷேக் ஹசீனா நாடு திரும்புவார்-மகன் சஜீப் வாசேத் ஜாய்

மக்களையும், அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டோம். எனது குடும்பமும் அவாமி லீக் கட்சியும் வங்காளதேச அரசியலில் தொடர்ந்து ஈடுபடும்.
ஜனநாயகம் தழைக்கும்போது ஷேக் ஹசீனா நாடு திரும்புவார்-மகன் சஜீப் வாசேத் ஜாய்
Published on

ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வங்காளதேசத்தில் ஜன நாயகம் திரும்பியவுடன் எனது தாய் நாடு திரும்புவார். அவர் வங்கதேசத்திற்கு நிச்சயமாகத் திரும்புவார். ஆனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவரா அல்லது அரசியல்வாதியாகத் திரும்புவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.

முன்பு எனது தாய் வங்கதேசத்துக்குத் திரும்ப மாட்டாள் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து முடிவை மாற்றி உள்ளோம்.

மக்களையும், அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டோம். அவாமி லீக் வங்காளதேசத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான அரசியல் கட்சி. எனவே நாங்கள் எங்கள் மக்களை விட்டு விலகிச் செல்ல முடியாது.

ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டவுடன் ஷேக் ஹசீனா நிச்சயமாக வங்க தேசத்திற்குத் திரும்புவார். ஒரு புதிய வங்காளதேசத்தை உருவாக்க விரும்பினால், அவாமி லீக் இல்லாமல் அது சாத்தியமில்லை. எனது குடும்பமும் அவாமி லீக் கட்சியும் வங்காளதேச அரசியலில் தொடர்ந்து ஈடுபடும்.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். முகமது யூனுசின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், அவர் ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவர் தனது வார்த்தைக்கு உண்மையாக இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com