டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கிய விமானம், 18 பேர் உயிரிழப்பு - வீடியோ

விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Nepal Flight Crash
Published on
Nepal Flight Crash

நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உள்பட 19 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com