காதலர்களை பிரித்துவிட்டால் ரூ.2.8 லட்சம் சம்பளம்... ஆனால் ஒரு கண்டிஷன்!

வேலைக்கு நவீன டேட்டிங் முறைகள் மற்றும் உறவுகள் குறித்த ஆழமான புரிதல் இருக்க வேண்டும்.
காதலை பிரித்துவிடுபவருக்கு ரூ.2.8 லட்சம் சம்பளம்... ஆனால் ஒரு கண்டிஷன்!
Published on

பிரேக் அப் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் உங்கள் காதலரை எப்படி கழட்டிவிடுவது என தெரியவில்லையா? உங்களுக்காகத்தான் இந்த செய்தி.

அமெரிக்காவைச் சேரந்த உலகளாவிய டேட்டிங் தளமான ‘டேட்டிங்.காம்’, தலைமை Breakup அதிகாரி பதவிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு மாதம் ரூ.2.8 லட்சம் ரூபாய் சம்பளம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வேலையில் சேர சில தகுதிகளையும் அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்த வேலையில் சேர நீங்கள் நினைத்தால், குறைந்தது 3 காதல் முறிவுகளை நீங்கள் சந்தித்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வேலைக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

ஒரு உறவில் உள்ள இருவருக்கிடையே உள்ள சிக்கல்களை புரியவைத்து அவர்களை சுமுகமாகவும், தெளிவாகவும், பிரச்னையின்றியும் பிரியவைக்க வேண்டும்.

நாம் ஒரு உறவை எப்படி பெறுகிறோமோ, அதைப்போல அதிலிருந்து விடைபெறுவதும் முக்கியம். உலகில் கிட்டத்தட்ட 84 சதவிகிதத்தினர் ஒரு உறவை சொல்லாமல் கொள்ளாமல் துண்டித்துவிட்டு செல்வதாக டேட்டிங்.காம் தெரிவித்துள்ளது.

முடிவுரை எழுதாமல் சென்று, காலம் முழுவதும் இந்த மௌனத்தில் சிக்குண்டு இருப்பதிற்கு பதிலாக, முறையாக அந்த உறவை முடிவுக்கு கொண்டு வருவதற்கே தாங்கள் உதவுவதாக அந்தத் தளத்தில் பணிபுரியும் ஜெய்மி பிரான்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com