Russia Ukraine War | உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: 2 பேர் கொல்லப்பட்டனர்

அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்படும் ரஷியா- உக்ரைன் இடையிலான புதிய பேச்சுவார்த்தை தொடங்க இருக்கும் நிலையில் உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது
Russia Ukraine War | உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: 2 பேர் கொல்லப்பட்டனர்
Published on

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா- ரஷியா- உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஈரான் போரால் தடைபட்டது. தற்போது பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ரஷியா உக்ரைனின் சபோரிஸ்சியா நகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு வீடு மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆண் ஒருவர், பெண் ஒருவர் என இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளார்.

மேலும், எனர்ஜி கட்டமைப்பு மீது நடத்திய தாக்குதலால செர்னிஹிவ் பிராந்தியம் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது.

புதிய பேச்சுவார்த்தைக்காக அதிகாரிகளை அனுப்பி வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ படைகள் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் முதன்மையானதாக வைக்கும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com