இங்கிலாந்து கடலில் அத்துமீறி நுழைந்த ரஷிய உளவு கப்பல்

விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
இங்கிலாந்து கடலில் அத்துமீறி நுழைந்த ரஷிய உளவு கப்பல்
Published on

இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறியதாவது:-

கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷிய கப்பல் நுழைந்தது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.

ஏனென்றால் அது நாட்டின் கடலுக்கடியில் உள்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தக் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க கடற்படை போர்க்கப்பலையும் போர் விமானங்களையும் நாங்கள் நிறுத்தினோம்.

அப்போது எங்கள் விமானிகள் மீது ரஷிய கப்பல் லேசர்களை செலுத்தியது. ரஷியாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. நாங்கள் ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com