சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு

சீனா-ரஷியா நட்பு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த சந்திப்பு நடந்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு
Published on

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா உருவெடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், சீனா ரஷியாவுடன் வர்த்தக உறவை தொடர்ந்து பேணி வருகிறது.

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அதிபர் புதின் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது சீனா-ரஷியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டு கையெழுத்தான சீனா-ரஷியா நட்பு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சீன பயணத்தை முடித்த சில நாட்களிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com