மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷியா உதவும்- அதிபர் புதின்

ரஷிய அதிபர் புதினை செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஈரான் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி சந்தித்தார்.
மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷியா உதவும்- அதிபர் புதின்
Published on

அமெரிக்கா- ஈரான் இடையே தற்போது 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

ஈரான் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் சென்று இருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே நாடு திரும்பினார். அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் என்று ஈரான் தெரிவித்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவும் தனது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை.

இதற்கிடையே ஈரான் வெளியுறவு துறை மந்திரி தலைமையிலான குழு ரஷியாவுக்கு சென்றது. ரஷிய அதிபர் புதினை செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஈரான் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதட்டத்தை தணித்து அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய தயார் என்று புதின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக புதின் தெரிவித்ததாக ஈரானின் அரசியல் தொலைக்காட்சி கூறியதாவது:-

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதட்டத்தை தணித்து அமைதி திரும்ப உதவ தயாராக இருக்கிறார். ரஷியா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராகி இருக்கிறது. தற்போதுள்ள இக்கட்டான காலத்தை ஈரான் கடந்து வரும் என நம்புகிறோம்.

இவ்வாறு புதின் தெரிவித்து உள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.

அப்பாஸ் அராக்சி கூறும் போது, ‘நாங்கள் எப்போதும் ரஷியாவுடன் பிராந்திய பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியான இருதரப்பு கலந்தாய்வை நடத்தி வருகிறோம். இந்த காலக்கட்டத்தில் போர் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து எங்களது ரஷிய நண்பர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது’ என்றார்.

அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவரம் குறித்து விவாதித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது ரஷியாவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com