ரஷியா, சீனா எதிர்ப்பு..ஹார்முஸ் நீரிணை தாக்குதல் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி

போர்ப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் ஹார்முஸ் நீரிணை திறக்கும் வகையில் பஹ்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.
ரஷியா, சீனா எதிர்ப்பு..ஹார்முஸ் நீரிணை தாக்குதல் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
Published on

வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது மட்டுமின்றி சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீ ரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அந்த நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா எண்ணெய் கிணறுகளை வளைகுடா நாடுகள் மூடின. இதனால் வளைகுடா நாடுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்களுடன் 10 தற்காலிக உறுப்பினர்கள் என 15 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக உள்ளது. ஏப்ரல் மாதத்தின் தற்காலிக தலைமைத்துவத்தை பஹ்ரைன் ஏற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி போர்ப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு மீண்டும் ஹார்முஸ் நீரிணை திறக்கும் வகையில் பஹ்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.

இதற்கு மற்ற நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷியா எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com