சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்

புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது.
சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்
Published on

பீஜிங்:

சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது. இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com