

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதழியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சமீபத்தில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா ஆகியோர் உள்ளனர்.
மேலும் ஜப்பானைச் சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சனுக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் ஆர்.கே. மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர், சுபர்ணா சர்மா டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.