

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுயேச்சை எம்.பி. ரூபர்ட் லோ (Rupert Lowe) நிகழ்த்திய உரையில், வன்முறை மற்றும் மிருகத்தனமான பாலியல் அத்துமீறல்களின் உச்சக்கட்ட நேரடி வாக்குமூலங்களை விவரித்தார்.
அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், "எனக்கு 13 வயது இருக்கும்போது 3 ஆண்டுகளில் சுமார் 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் நான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டேன்" என்றும், மற்றொரு பெண், தனக்கு 12 வயது இருக்கும்போது குற்றவாளிகள் மதுபாட்டிலை தமக்குள் திணித்து, உடைத்து உடல் ரீதியான சித்திரவதைகளைச் செய்ததாகக் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
மற்றுமொரு பெண் பேசுகையில், ஒரு வேனின் பின்புற கதவை திறந்து பார்க்கும்போது நாய்களை அடைத்து வைத்ததுபோல் 15 முதல் 20 சிறுமிகளை அடைத்து வைத்திருந்தனர். யாரும் ஏன்? என்ற கேள்வி கூட கேட்கவில்லை. சிரித்துக்கொண்டும், வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பிரிட்டனைச் சேர்ந்த 'வெள்ளை இன' மற்றும் 'கிறிஸ்தவ' சிறுமிகள் அவர்களுக்கு ஒழுக்கமும் மதிப்பும் குறைவு. ஆனால் முஸ்லிம் பெண்களுக்குக் கண்ணியமும் உயர்ந்த ஒழுக்கமும் உண்டு" என்று கூறி, அந்த கும்பல் தங்களின் கொடூரங்களை நியாயப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், எனது தந்தை 'இமாம்' (மத குரு) என்று கூறி கதறினார்.
இந்த விவகாரங்களில் தான் தலையிட்டால் "இனவெறியர்கள்" என்று தங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள் என்றும், பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த விவகாரங்களில் ஈடுபடாததால் அவர்களுக்கு அலட்சியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறிவந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட 15 வயது சிறுமி கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் சென்றபோது, பயணத்தில் ஒருவர் தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக மருத்துவரிடம் கூறினார். ஆனால் அப்போது எந்த கேள்வியும் கேட்காமல் மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்ற முதியோர்களை அச்சுறுத்துவது, சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் மேலும் மேலும் பெண்களை துன்புறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் சுடுகாட்டினார்கள்.
பிரிட்டன் அரசு நடத்திய விசாரணையில், இந்த மாதிரியான வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோனோர் பாகிஸ்தானை சேர்ந்த டாக்ஸி டிரைவர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் என்று உறுதி செய்தனர்.
எம்.பி. ரூபர்ட் லோவின் விசாரணையின்படி, பிரிட்டன் முழுவதும் குறைந்தது 85 இடங்களில் இந்த "பாலியல் கும்பல்கள்" பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 1997 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ரோதர்ஹாம் (Rotherham) பகுதியில் மட்டுமே 1,400-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இந்த கும்பலால் சீரழிக்கப்பட்டுள்ளனர். 2012-ல் நடந்த 'ஆபரேஷன் ஸ்பான்' (Operation Span) விசாரணையில் 9 பேர் தண்டிக்கப்பட்டனர். அதில் 8 பேர் பிரிட்டிஷ்- பாகிஸ்தான் ஆண்கள் ஆவர்.
பிரிட்டன் அரசு அமைத்த சிறுவர் பாலியல் சுரண்டல் தடுப்புப் பணிக்குழுவின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் பிரிட்டனில் குழந்தைகளுக்கு எதிராக 1.15 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதில் 4,228 குற்றங்கள் இத்தகைய கூட்டு பாலியல் கும்பல்களால் செய்யப்பட்டவை ஆகும்.
பிரிட்டனில் சிறுமிகளுக்கு எதிராக நடந்துள்ள இந்த மிக மோசமான மனித உரிமை மீறல் விவகாரம், தற்போது உலக நாடுகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.