மகிந்த ராஜபக்‌சே குடும்பத்தினர் கடற்படை முகாமில் தஞ்சம்- முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்‌சே குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது.
ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்கள்
ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்கள்
Published on

திரிகோணமலை:

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள 35 அரசியல் தலைவர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன. 

அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்‌சேவின் வீடும் தீ வைக்கப்பட்டது. இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com