காதலுக்கு பாலினம் இல்லை!.. இனிதே துவங்கிய Pride மாதம் - LGBQT+ சமூகத்தினர் கொண்டாட்டம்

இந்தியாவில் 377-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
காதலுக்கு பாலினம் இல்லை!.. இனிதே துவங்கிய Pride மாதம் - LGBQT+ சமூகத்தினர் கொண்டாட்டம்
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் pride month ஆகக் கொண்டாடப்படுகிறது. இது LGBQT+ சமூகத்தினரின் அடையாளம், உரிமைகள், சமத்துவம் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை மதித்து கொண்டாடும் மாதமாகும்.

21ம் நூற்றாண்டில் இவ்வளவு பெரிய டிஜிட்டல் வளர்ச்சியை உலகம் அடைந்து விட்ட போதிலும், தன்பாலின ஈர்ப்பாளர்களை (LGBQT) ஏற்றுக்கொள்வதில் நம் சமூகம் சற்று தயக்கம் காட்டி வருகிறது.

1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற stonewall riots நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் pride month கொண்டாடப்படுகிறது.

LGBQT+ சமூகத்தினரின் அடையாளம், உரிமைகள், சமத்துவம் மற்றும் அவர்களின் அங்கீகாரத்தை வலியுறுத்தும் வகையில், இந்த ஜூன் மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெறுகிறது.

இந்தியாவில் 377-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தபோதிலும், LGBQT+ சமூகத்தினர் முழூமையான அங்கீகாரத்தை பெறுவதில் இன்னமும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

பல உலக நாடுகளில் LGBQT+ சமூகத்தினரின் உரிமைகள் குறித்து விவாதங்கள் தொடர்கின்றன. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பில் சமமான உரிமைகளை வலியுறுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அவர்களை ஆதரித்து diversity-inclussion ஊக்குவிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை கலைந்து, மனிதர்களின் வேறுபாடுகள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைவரும் சமமாக வாழும் உலகை உருவாக்குவதே LGBQT+ சமூகத்தினரின் pride month கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com