மொரீஷியஸ் பிரதமருடன் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மொரீஷியஸ் பிரதமருடன் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை
Published on

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார். தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.

இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, மொரீஷியஸ் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் பங்கேற்பது உட்பட இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் பிரதமர் மோடி-மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com