பிக்கிள்பால் வீரர்களை ஏற்றிச்சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து - 5 பேர் பலி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்கிள்பால் வீரர்களை ஏற்றிச்சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து - 5 பேர் பலி
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில், அதில் பயணம் செய்த பிக்கிள்பால் வீரர்கள் 5 பேர் பலியாகினர்.

அமரில்லோ கிளப்பை சேர்ந்த இவர்கள், நியூ பிரான்ஃபெல்ஸ் நகரில் நடைபெறவிருந்த தொடரில் பங்கேற்க சென்றபோது விம்பர்லி அருகே விமானம் விபத்துக்குள்ளானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்டினுக்கு தென்மேற்கே சுமார் 40 மைல் (64 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள விம்பர்லி நகரில், வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

விமானி மற்றும் விமானத்தில் இருந்த 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com