பாகிஸ்தான் படையே வெளியேறு: PoK-யில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்கள்..!

பாகிஸ்தான் அரசு, தங்களுக்கு சுதந்திரம், தங்களை பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதி என்பதை நீக்க வேண்டும் உள்ளிட்ட 38 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
PoK
PoK
Published on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து 14-வது நாளாக நடைபெற்று வருகிறது. அவாமி ஆக்சன் கமிட்டி ஒருங்கிணைத்துள்ள இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பள்ளி குழந்தைகள், பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் அரசு, தங்களுக்கு சுதந்திரம், தங்களை பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதி என்பதை நீக்க வேண்டும் உள்ளிட்ட 38 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் படையே வெளியேறு என 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி வருகினறனர். நாங்கள் அடிப்படை உரிமைகளை கேட்கிறோம். நாங்கள் இலவச கல்வியை விரும்புகிறோம் என பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 முதல் 12 வயது சிறுவர்கள் விடுதலை கோசங்களை எழுப்பினர். அவாமி ஆக்சன் கமிட்டி நாளை வரை கெடு விதித்துள்ளது. ராவலகோட் முதல் முசாரபாத் வரை ஒரு லட்சம் போராட்டக்காரர்களை திரட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூன் 5-ந்தேதியில் இருந்து இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடங்கியதில் இருந்து 58 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com