மெகா ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமரின் மகளுக்கு முன் ஜாமீன்

மெகா ஊழல் தொடர்பான வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
மெகா ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமரின் மகளுக்கு முன் ஜாமீன்
Published on

மெகா ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நீதிபதி அஷ்ஃபாக் அகமது, இருவரின் ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொண்டதுடன், மே 7-ம் தேதி வரை அவர்களை கைது செய்யக்கூடாது என மத்திய புலனாய்வு முகமைக்கு (FIA) உத்தரவிட்டுள்ளார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 2022-ம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இந்தத் தம்பதி, அங்கிருந்து திரும்பியதும் தங்கள் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். இதையடுத்து, பெரும் ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், பிரதமர் ஷெபாஸின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோருக்கு, லாகூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மே 7-ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.

பஞ்சாப் சாஃப் பானி நிறுவனம் தொடர்பான பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு நீதிமன்றம் கைது செய்வதற்கான நிரந்தர வாரண்டு பிறப்பித்தது. இதனால் கைதியில் இருந்து தப்பிக்க இருவரும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். இதனால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பான என்.ஏ.பி., வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தில், அவர்களுக்கு எதிரான வாரண்ட்-ஐ ரத்து செய்தால், ஆனால் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டோம் எனத் தெரிவித்தது. இதனால் வாரண்ட் ரத்து செய்யப்பட்டு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com