

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சி பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்க்வாவில் வன்முறையில் ஈடுபட்டது. ராணுவ அமைப்புகள் மற்றும் மாநிலத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடித்து சேதப்படுத்தின.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியது. அப்போது பஞ்சாப் முன்னாள் ஆளுநர் உமர் சர்பிராஸ் சீமா, பஞ்சாப் முன்னாள் சுகாதார அமைச்சர் யாஸ்மின் ரஷித், முன்னாள் அமைச்சர் மியான் மெஹ்மூதுர் ரஷித், முன்னாள் செனட்டர் இஜாஸ் சவுத்ரி ஆகியோருக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி விடுவிக்கப்பட்டார்.