பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க சதி... ஓபன்ஏஐ குற்றச்சாட்டு

இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்ததாக ஓபன் ஏஐ குற்றம்சாட்டியுள்ளது.ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத்தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.
பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க சதி... ஓபன்ஏஐ குற்றச்சாட்டு
Published on

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்ததாக ஓபன் ஏஐ குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன்ஏஐ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்திட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்ததை பயன்படுத்த முயற்சித்தது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை பாராட்டி மக்களிடம் கருத்துருவை உருவாக்கிடவும் முயற்சித்ததாக கூறியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத்தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com