Netanyahu | போர் நிறுத்தம் கிடையாது... ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

உங்கள் பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்
Netanyahu | போர் நிறுத்தம் கிடையாது... ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
Published on

"லெபனானில் போர் நிறுத்தம் இல்லை" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியதுடன், ஹிஸ்புல்லாவிற்கு எதிராக "முழு பலத்துடன்" இராணுவ நடவடிக்கைகளை தொடர போவதாக தெரிவித்தார்.

"நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்: லெபனானில் போர் நிறுத்தம் இல்லை. நாங்கள் ஹிஸ்புல்லா மீது முழு பலத்துடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம், உங்கள் பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்," என்று அவர் கூறினார்.

"லெபனான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளை தொடர்ந்து, இரண்டு இலக்குகளை அடைவதற்காக லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு நேற்று இரவு அமைச்சரவைக்கு நான் அறிவுறுத்தினேன். முதலாவதாக, ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை களைதல். இரண்டாவதாக, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஒரு வரலாற்று அமைதி ஒப்பந்தம்," என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹிஸ்புல்லாவின் ஏவுதளங்கள் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. "லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ஏவுதளங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளன," என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தன.

முன்னதாக, ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை களைவதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com