வெனிசுலா அழகிக்கு ஏற்பட்ட அவலம்..! ஒப்பனையாளர் தாக்கியதால் கோரமான அழகிய முகம்..!- வீடியோ

மிஸ் வெனிசுலாவை அவரது ஒப்பனையாளர் கடுமையாக தாக்கியதால் முகத்தில் பலத்த காயம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது.
வெனிசுலா அழகிக்கு ஏற்பட்ட அவலம்..! ஒப்பனையாளர் தாக்கியதால் கோரமான அழகிய முகம்..!- வீடியோ
வெனிசுலா அழகி மீது கொடூர தாக்குதல் நடத்திய ஒப்பனையாளர்
Published on

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா (2026) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுலா ஆண்ட்ரியா டெல் வால் (29) மற்றும் பிரபல ஒப்பனையாளர் ஜியோவானி லகுனா ஆகியோர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது அவரது ஒப்பனையாளர் ஆண்ட்ரியாவை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை மிஸ் வெனிசுலா ஆண்ட்ரியா டெல் வால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அப்போது ஸ்பானிஷ் மொழியில் பேசிய அவர், "ஜியோவானி லகுனா என்ன செய்தார் என்று பாருங்கள். வாழ்த்துகள் ஜியோவானி, நீங்கள் உண்மையில் யார் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்" என்று ஆக்ரோஷமாகவும் அழுதுகொண்டும் கூறியுள்ளார்.

அந்த ஹோட்டல் அறை முழுவதும் பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் சிதறியும் சீர்குலைந்து காணப்படுகிறது. வீடியோவில் ஷோபாவில் ஒப்பனையாளர் ஜியோவானி லகுனா ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது.

ஹோட்டல் அறையிலிருந்து பயங்கர சத்தமும், சண்டை போடும் சத்தமும் கேட்டதால், அங்கிருந்த மற்ற விருந்தினர்கள் உடனடியாக பிரான்ஸ் நாட்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், ஆண்ட்ரியாவை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்க்கையில், ஆண்ட்ரியாவின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. அவர் பாதுகாப்பாக நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஜியோவானி லகுனா, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அழகிப் போட்டி வட்டாரங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு ஒப்பனையாளர் ஆவார். 2023 முதல் 'மிஸ் யுனிவர்ஸ் கொலம்பியா' அமைப்பின் கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், மிஸ் வெனிசுலா மற்றும் பிற சர்வதேச அழகிகளுடன் நெருங்கிய தொழில்முறைத் தொடர்பில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவருக்கும் இடையே எதனால் இந்த வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்பட்டது என்பதற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிரான்ஸ் போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com