மைக்ரோசாப்ட் கோபைலட் செயலியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ‘சூப்பர்-ஆப்’ வடிவமைப்பு

மைக்ரோசாப்ட் 365 கோபைலட் செயற்கை நுண்ணறிவில் நிலவும் குழப்பத்தை தீர்க்க விரைவில் புதிய ஆப்-ஐ வடிமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
MIcrosoft copilot bugs will be resolved shortly
Published on

மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கோபைலட் செயற்கை நுண்ணறிவு செயலி, அதன் ஊழியர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைசரி செய்யும் வகையில் ஒரு சூப்பர் ஆப்-ஐ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் 365 கோபைலட் (CoPilot) என்ற மறுவடிமைக்கப்பட்ட பதிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த பதிப்பின் மூலம், பயனாளர்கள் அன்றாடப் பணிகளை நேர்த்தியாகவும், வேகமாகவும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மேம்படுத்தப்பட்ட மைக்ரோசாப்டை கூகுள் ஜெமினி (Google Gemini) மற்றும் சாட்கிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு போட்டியாளராக அறிமுகம் செய்தது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கோபைலட் செயலி இரண்டு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் இயங்கி வருவதாகவும், மேலும் சிக்கலான கட்டளைகளுக்கான பதிலளிப்பு நேரங்கள் சுமார் 10 சதவீதம் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பயனர்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோசாப்ட் வேர்ட் (word), மைக்ரோசாப்ட் எக்செல் (excel), மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் (powerpoint) மற்றும் மைக்ரோசாப் அவுட்லுக் (outlook) போன்ற செயலிகளிலும் கோபைலட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் செயலியில், GitHub Copilot (கோடிங்கிற்காக), Copilot Chat (உரையாடலுக்காக) , Copilot Cowork (குழு ஒத்துழைப்பிற்காக) Autopilot (தானியங்கு பதிப்பாய்வுக்காக) ஆகியவற்றை இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com