கராச்சி விமான நிலையத்தை அதிர வைத்த பயங்கர வெடிச்சத்தம்

கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையம்கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
கராச்சி விமான நிலையத்தை அதிர வைத்த பயங்கர வெடிச்சத்தம்
Published on

கராச்சி:

பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

விமான நிலையத்திற்கு வெளியே டேங்கர் ஒன்று வெடித்ததாக போலீசாரும், மாகாண அரசாங்கமும் தெரிவித்தன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன.

ஆனால் சிந்து மாகாண உள்துறை மந்திரி ஜியா உல் ஹசன் உள்ளூர் தொலைக்காட்சியான ஜியோவிடம் கூறுகையில், இது வெளிநாட்டினர் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.

இதுதொடர்பான வீடியோவில் கார்கள் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்து அடர்த்தியான புகை எழுவதும் பதிவானது.

கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com