Kremlin | புதின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு குறித்து கிரெம்ளின் விளக்கம்

அது ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே இருக்க முடியும்.
Kremlin | புதின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு குறித்து கிரெம்ளின் விளக்கம்
Published on

மோதல் தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க முடியும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் புதன்கிழமை கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

"இந்த சந்திப்பின் நோக்கம்தான் முக்கியமானது. அவர்கள் ஏன் சந்திக்க வேண்டும்? மாஸ்கோவில் எந்த நேரத்திலும் ஒரு சந்திப்பிற்குத் தயாராக இருப்பதாக புதின் கூறியுள்ளார்," என்று பெஸ்கோவ் ரஷ்ய அரசு தொலைக்காட்சியிடம் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

சந்திப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பதும், அந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுமே முக்கியம். மேலும், அது ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே இருக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com