அமெரிக்காவில் மன்னர் சார்லஸ்.. கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்பத் தர கேட்கும் மம்தானி!

டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
அமெரிக்காவில் மன்னர் சார்லஸ்.. கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்பத் தர கேட்கும் மம்தானி!
Published on

அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயராக கடந்த ஜனவரி 1 அன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார்.

பிரபல திரைப்பட இயக்குனர் மீரா நாயரின் மகனான இவர் இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் ஆவார். டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமீலாவுடன் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் புதன்கிழமை அன்று 9/11 நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். மம்தானியும் அங்கு உடனிருந்தார்.

மன்னரை சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் என்ன கேட்டிருப்பீர்கள் என மம்தானியிடம் அன்றைய நாள் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மம்தானி, அவருடன் தனிப்பட்ட முறையில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு நான் அவரை வலியுறுத்தியிருப்பேன் என்று தெரிவித்தார்.

கோஹினூர் வைரம்

கோஹினூர் வைரம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.

இது முகலாயர்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட பல இந்திய ஆட்சியாளர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

1849-ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் ஆங்கிலோ-சீக்கியப் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றினர். அந்த வைரம் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது இந்த வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.

இன்று, கோஹினூர் வைரம் லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டு, பிரிட்டிஷ் முடியாட்சியின் ஒரு பகுதியாக விளங்குகிறது. பலமுறை இந்திய அரசு முயற்சி செய்தும் இந்த வைரத்தை திரும்ப பெற முடியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com