

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவிற்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வண்ணம் அவரின் இந்த பயணம் அமைந்துள்ளது.
நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை வரவேற்றனர்.
நேற்று வெள்ளை மாளிகையில் வைத்து நடந்த இரவு விருதில் டிரம்ப் மற்றும் மன்னர் சார்லஸ் உரையாற்றினர்.
டிரம்ப் கூறுகையில், "எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. சார்லஸ் இளமை பருவத்தில் இருந்தபோது, அவர் மிகவும் அழகாக இருப்பதாக என் தாயார் சொன்னது நினைவில் இருக்கிறது" என்று கூறினார்.
இதற்கிடையே மன்னர் சார்லஸ் உரையாற்றுகையில், " இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா உதவாமல் இருந்திருந்தால், ஐரோப்பிய நாடுகள் ஜெர்மன் மொழி பேசியிருக்கும் என்று கூறியிருந்தார்.
நாங்கள் (பிரிட்டன்) இருந்திருக்காவிட்டால், நீங்கள் (அமெரிக்கர்கள்) இப்போது பிரெஞ்சு பேசிக்கொண்டிருப்பீர்கள்," என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க காங்கிரசில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கக் கூடாது என்பதில் அதிபர் டிரம்ப் உடன் தான் முழுமையாக உடன்படுவதாகத் தெரிவித்தார்.
நிச்சயமற்ற இந்தத் தருணத்தில், மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.