மாதக்கணக்காக வெறும் 4 மணி நேரம் தூக்கம்.. அதிகாலை 3 மணி வரை பணி - மெட்டாவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர் குறித்து சக ஊழியர் உருக்கம்

அதிகாலை 3 மணி வரை வேலை செய்துவிட்டு, பின்னர் காலை 6 மணிக்கு மீண்டும் பணியை தொடங்குவார்.
மாதக்கணக்காக வெறும் 4 மணி நேரம் தூக்கம்.. அதிகாலை 3 மணி வரை பணி - மெட்டாவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர் குறித்து சக ஊழியர் உருக்கம்
Published on

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய முன்னணி சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா, தனது உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏஐ மூலம் குறைந்த செலவில் பணிகளை செய்யவே இந்த முடிவை மெட்டா எடுத்துள்ளது.

ஊழியர்களிடையே நேரடிப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, மெட்டா நிறுவனம் அன்றைய தினம் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு உத்தரவிட்டது.

பின்னர் அதிகாலை 4 மணி அளவில் பணிநீக்கத்திற்கான மின்னஞ்சல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை சம்பளமும், அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் கூடுதலாக 2 வாரச் சம்பளமும், 18 மாதங்களுக்கான குடும்ப மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

இந்நிலையில் மெட்டாவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்ட தன் சக ஊழியர் குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில் கூறியதாவது, "மெட்டாவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திறமையற்றவர்கள் என்று தயவுசெய்து கருத வேண்டாம். நான் ஒரு சுமாரான ஊழியர், என் சக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் நான் மட்டும் தப்பிவிட்டேனே என்று மிகவும் வருந்துகிறேன்.

பணியிலிருந்து நீக்கப்பட்ட என் சக ஊழியர் மிகவும் பண்பானவர் மற்றும் நம்பகமானவர். அவர் மிகக் குறுகிய காலக்கெடு கொண்ட ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் பணியாற்றி வந்தார்.

அவர் தனது முழு முயற்சியையும் செலுத்தி, பல மாதங்களாக சுமார் 80% நேரம் வேலை செய்தார். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கினார். அதிகப்படியான வேலை காரணமாக அவர் பலமுறை உடல்நிலை சரியில்லாமல் போனது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவர் அதிகாலை 3 மணி வரை வேலை செய்துவிட்டு, பின்னர் காலை 6 மணிக்கு மீண்டும் பணியை தொடங்குவார். சரியாக அதே அதிகாலை வேலை அவர் திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தங்களது கணினிச் செயல்பாடுகள் மற்றும் மவுஸ் நகர்வுகளைக் கண்காணித்து, அதன் மூலமே புதிய ஏஐ மாடல்களுக்கு மெட்டா நிறுவனம் பயிற்சி அளித்து வந்ததாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

"எங்களது உழைப்பை வைத்தே எங்களை வேலைநீக்கம் செய்யும் ஏஐ-ஐ உருவாக்கியுள்ளனர்" என்று ஊழியர்கள் மனம் நொந்துள்ளதனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com