‘வழுக்கைத் தலையன்’ என்ற பதாகை முடிமாற்று சிகிச்சை மேற்கொள்ள தூண்டியது: WWE சாம்பியன் ஜான் சீனா

எனக்குத் துணையாக இருந்த மருத்துவர் கென் ஆண்டர்சன் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி என்று ஜான் சீனா பதிவிட்டுள்ளார்.
John Cena Hair Transplant
Published on

WWE சாம்பியன் ஜான் சீனா:

நடிகரும் முன்னாள் WWE சாம்பியனுமான ஜான் சீனா, தனது இரண்டாவது முடிமாற்று சிகிச்சைக்குப் பிறகு ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த தனது முதல் முடி மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக, தனது பயணம் குறித்து ஜான் சீனா ஆரம்பத்தில் வெளிப்படையாகப் பேசினார்.

பல ஆண்டுகளாக WWE பார்வையாளர்களில் இருந்த ரசிகர்கள், "வழுக்கைத் தலையன் ஜான் சீனா" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததே, தன்னை முடிமாற்று சிகிச்சை மேற்கொள்ள தூண்டியதாக அவர் கூறினார்.

முதல் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிவப்பு ஒளி சிகிச்சை, மினாக்ஸிடில் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய ஒரு பிரத்யேக முடி ஆரோக்கியப் பராமரிப்பு முறையை அவர் மேற்கொண்டார் என வலைதளத்தில் செய்தி வெளியானது.

இரண்டாவது முடிமாற்று சிகிச்சை:

இந்நிலையில் ஜான் சீனா, தனது இரண்டாவது சுற்று முடி மாற்று சிகிச்சையை அட்லாண்டாவில் உள்ள ஆண்டர்சன் சென்டர் ஃபார் ஹேர் மையத்தில் மேற்கொண்டார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "FUE சிகிச்சையின் இரண்டாம் சுற்றில் மிகச் சிறந்த முடிவுகளுக்காக நான் இதில் முழுமையாக ஈடுபட்டேன்.

இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக இருந்த மருத்துவர் கென் ஆண்டர்சன் மற்றும் ஆண்டர்சன் சென்டர் ஃபார் ஹேர் ஊழியர்களுக்கு நன்றி” என்று ஜான் சீனா பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com